சிரஞ்சீவி, நாகார்ஜூனா இணையும் புதிய படம்
தெலுங்கு திரை உலகில் உச்ச நடிகர்களாக இருக்கும் சிரஞ்சீவி மற்றும் நாகார்ஜூனா இருவருக்கும் தனி ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது. இன்றைய இளம் தலைமுறை நடிகர்கள் பலர் நடிக்க வந்த போதிலும், அவர்களுக்கான இடத்தை அவர்கள் அப்படியே தக்க வைத்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் இருவரும் புதிய படமொன்றில் இணைந்து நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த படத்தை பிரபல இயக்குனர் அனில் ரவிபுடி இயக்க இருக்கிறார். படத்திற்கான கதை விவாதங்கள் தீவிரமாக நடந்து வருகின்றன. அதிக பொருட்செலவில் பிரமாண்ட படமாக இது உருவாக இருக்கிறது.படத்தில் இருவருக்கும் சமமான முக்கியத்துவம் கொடுத்து மல்டி ஸ்டார் படமாக உருவாகி இருக்கிறது.