ஜெயராம், சிம்ரன் நடிக்கும் புதிய ஃபேமிலி ரோம் காம் படம்

ஜெயராம், சிம்ரன் நடிக்கும் புதிய ஃபேமிலி ரோம் காம் படம்
தேஜாவு, வித்தைகாரன் ஆகிய படங்களை தயாரித்த ஒயிட் கார்பெட் பிலிம் சார்பில் கே.விஜய் பாண்டி மற்றும் ரிடக்டட் ஸ்டுடியோஸ் சார்பில் சஞ்சன் ஜி. ஆகியோர் இணைந்து தயாரிக்க, தி ஷோ பீப்பிள் சார்பில் நடிகர் ஆர்யா வழங்கும் புதிய படத்தில் ஜெயராம் மற்றும் சிம்ரன் லீட் ரோலில் நடிக்கின்றனர்.இப்படத்தை ‘ராட்சசி’, ‘கழுவேத்தி மூர்க்கன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய எஸ் ஒய் கௌதம்ராஜ் இயக்குகிறார்.

ஃபேமிலி ரோம் காம் படமாக உருவாகும் இப்படம், ஜென் சி கிட்ஸ், 2 கே கிட்ஸ் மற்றும் 90ஸ் கிட்ஸ் இடையிலான உறவுகளையும், அவர்களின் வாழ்க்கையில் நடைபெறும் சுவாரஸ்ய சம்பவங்களையும் மையமாகக் கொண்டு உருவாகிறது. இதன் பூஜை சென்னையில் நடைபெற்றது. இதில் வாழை படத்தில் நடித்த பொன்வேல் முக்கிய கேரக்டரில் நடிக்க,தேவிகா சதீஷ், பகவதி பெருமாள் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்திற்கு தீபக் ஒளிப்பதிவு செய்ய, அச்சு ராஜாமணி இசையமைக்கிறார்.

Comments (0)
Add Comment