சீனாவில் உள்ள ஷான்ங்சி மாகாணத்தில் உள்ள பல்கலைகழகத்தில் நடன நிகழ்ச்சி நடந்தது. இதில் மனித உருவ ரோபோ ஒன்று பங்கேற்றது.

சீனாவில் உள்ள ஷான்ங்சி மாகாணத்தில் உள்ள பல்கலைகழகத்தில் நடன நிகழ்ச்சி நடந்தது. இதில் மனித உருவ ரோபோ ஒன்று பங்கேற்றது.

நடன நிகழ்ச்சியின் போது, மனித ரோபோ திடீரென மாணவியை அருகே சென்று அவரை கட்டி பிடித்தது. இதை பார்த்ததும் கூட்டத்தில் இருந்தவர்கள் திகைத்து போயினர். இதை தொடர்ந்து பல்கலைகழக பணியாளர்கள் அந்த ரோபோவை விலக்கினர். இந்த சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

அந்த ரோபோ தானாக இயங்க தொடங்கியதா, அல்லது அதை இயக்கியவரால் கையாளப்பட்டதா என்பது குறித்து சமூக ஊடகங்களில் ஒரு விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ரோபோவின் இந்த எதிர்பாராத நடத்தை கடும் விவாதத்தைத் தூண்டியுள்ளது. சில இணையவாசிகள் அந்த ரோபோவுக்கு சுய விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவித்தனர்.

Comments (0)
Add Comment