செப்டம்பரில் 7 ஸ்டார் பாய்ஸ் ரிலீஸ்

செப்டம்பரில் 7 ஸ்டார் பாய்ஸ் ரிலீஸ்
மலையாள இயக்குநர் நிகில் பிரேம் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘7 ஸ்டார் பாய்ஸ்’ திரைப்படத்தில் ஆண்டனி வர்கீஸ், இந்திய கால்பந்தாட்ட அணியின் முன்னாள் வீரரான ‘ பிகில்’ ஐ எம் விஜயன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஃபயஸ் சித்திக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்திருக்கிறார். கால்பந்தாட்ட விளையாட்டு பின்னணியில் மலையாளத்தில் ‘ஆனபரம்பிலே வேர்ல்டு கப்’ என்ற பெயரில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற இந்த திரைப்படத்தை பீனிக்ஸ் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பாளர் டி. அசோக் தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிடுகிறார். இத்திரைப்படம் செப்டம்பர் மாதம் 4ஆம் தேதி தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Comments (0)
Add Comment