ஸ்வீட் எடு; ஆனா சாப்பிடாதே: ராஷ்மிகா
நடிகை ராஷ்மிகா மந்தனா தெலுங்கில் மைசா மற்றும் ரணபாலி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் மைசா படப்பிடிப்பின் போது அவருக்கு இடுப்புப் பகுதியில் உள் காயம் ஏற்பட்டது. அதன் காரணமாக சிகிச்சை பெற்றுக்கொண்டு, தற்போது வீட்டிலேயே ஓய்வெடுத்துக் கொண்டு குடும்பத்தினருடன் பொழுதைக் கழித்து வருகிறார். இந்த காயத்தில் இருந்து முழுமையாகக் குணமடையும் வரை உணவு மற்றும் உடல் எடை கட்டுப்பாட்டில் கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதனால் சர்க்கரை மற்றும் இனிப்பு வகைகளைத் தவிர்த்து வருகிறார்.அதேசமயம், இனிப்பு வகைகளை உண்ண முடியவில்லை என்கிற தனது வருத்தத்தை நகைச்சுவையாகத் இன்ஸ்டா ஸ்டோரியில் ஒரு வீடியோ மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.