சூர்ப்பனகை கேரக்டர் குறித்து மனம் திறந்த ரகுல் பிரீத்

சூர்ப்பனகை கேரக்டர் குறித்து மனம் திறந்த ரகுல் பிரீத்
பாலிவுட் இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கி வரும் ராமாயணம் படத்தில், ராவணனின் சகோதரி சூர்ப்பனகை கதாபாத்திரத் தில் நடிகை ரகுல் பிரீத் சிங் நடித்து வருகிறார். சூர்ப்பனகையாக நடித்த அனுபவம் குறித்து அவர் கூறியது, “இந்த கேரக்டரில் நடித்த போது தான் எனக்குத் தெரியாத பல விஷயங்களை தெரிந்துகொண்டேன். குறிப்பாக, லட்சுமணன் சூர்ப்பனகையின் மூக்கைத் துண்டித்த சம்பவத்திற்கு முன்பும், அதற்குப் பிறகும் அவரது வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களை திரைக் கதையின் மூலம் தெரிந்து கொண்டேன். சூர்ப்பனகை கதாபாத்திரத்தின் பின்னணியும்,அவரது ஆளுமையும் எனக்கு மிகவும் சுவாரசியமாக இருந்தது. இலங்கையின் அழகான பெண் என்று அழைக்கப்பட்ட அவருக்கு அழகுடன் சேர்ந்து அகங்காரமும் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், வரலாறு அவரை பெரும்பாலும் ஒரு கொடூரமான வில்லியாக மட்டுமே நினைவு கூர்கிறது என்றார்.

Comments (0)
Add Comment