சரத்குமாரின் 171வது படம் துவக்கம்
தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி ஹீரோ மற்றும் குணச்சித்திர கேரக்டர்களில் நடித்து 170 படங்களை நிறைவு செய்துள்ளா ர் சரத்குமார்.அவரின் 171வது படத்தை ஸ்ரீ ராஜலட்சுமி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் பி.எல்.தேனப்பன் மற்றும் பிரெசிடென்ஷிய ல் மூவீஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் அனுப் மோகன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின் றனர். இந்தப் படத்தை ராகுல் சக்கரவர்த்தி இயக்குகிறார். கதையை விஜய் பார்கவ் எழுதியுள்ளார். இதன் படப்பிடிப்பு நவம்பர் 15 அன்று தொடங்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.