‘உணவுக்கு பதில் டீ, காபி!’ – ஏர் இந்தியாவின் புதிய திட்டம்!

‘உணவுக்கு பதில் டீ, காபி!’ – ஏர் இந்தியாவின் புதிய திட்டம்!

விமானப் பயணச் செலவைக் குறைக்கும் நோக்கில், Air India நிறுவனம் புதிய ‘Basic Fare’ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயணம் செய்யும் பயணிகளுக்கு, இதுவரை வழங்கப்பட்ட இலவச உணவுக்கு பதிலாக *தேநீர் அல்லது காபி மட்டுமே வழங்கப்படும்* என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணத்தின் போது உணவு வேண்டுமெனில், பயணிகள் கூடுதல் கட்டணம் செலுத்தி முன்கூட்டியே உணவை முன்பதிவு செய்ய வேண்டும். அதேசமயம், பயணிகளுக்கான லக்கேஜ் (சாமான்கள்) சலுகைகளில் எந்த மாற்றமும் இல்லை என்றும் நிறுவனம் விளக்கியுள்ளது. குறைந்த கட்டணத்தில் விமானப் பயணத்தை வழங்கும் நோக்கில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இந்த ‘Basic Fare’ திட்டம் உள்நாட்டு விமான சேவைகளில் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் வரவேற்பை பொறுத்து, அடுத்தகட்டமாக பிற சேவைகளிலும் விரிவுபடுத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Comments (0)
Add Comment