யோகா மீண்டும் என்னை இயக்குனர் ஆக்கியது; மனம் திறந்த எழில்

யோகா மீண்டும் என்னை இயக்குனர் ஆக்கியது; மனம் திறந்த எழில்
ஆர்.சுப்ரமணிய பாரதி இயக்கியுள்ள படம் ‘ஆனந்த வாழ்க்கை’. இதில் கே.பாக்யராஜ், மீராகிருஷ்ணன், ஜீவா தங்கவேல், விட்டல் ராவ் ஆகியோர் நடித்துள்ளனர். இதன் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் எழில் பேசியது, 2011ல் எனக்கு இருந்த மன அழுத்தத்தை குறைக்க அடையாறில் உள்ள மனவளக்கலை மன்றத்திற்கு சென்று ஒரு வார பயிற்சி வகுப்பில் சேர்ந்தேன். ஒரு வாரத்திலேயே எனக்கு மன அமைதி கிடைத்தது. தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் அடுத்த ஆண்டு மனம் கொத்தி பறவை என்ற படத்தை எடுத்தேன். அது பெரிய வெற்றி படமாக அமைந்தது என்றார்.

Comments (0)
Add Comment