யெல்லோ யெல்லோ டர்டி ஃபெல்லோ பட ஃபர்ஸ்ட் லுக்

யெல்லோ யெல்லோ டர்டி ஃபெல்லோ பட ஃபர்ஸ்ட் லுக்
ஏபி இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குநர் விக்கி பாஸ்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் யெல்லோ யெல்லோ டர்டி ஃபெல்லோ. இதில் ஓஹோ எந்தன் பேபி” படம் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆன ருத்ரா மற்றும் அயோத்தி பட புகழ் ப்ரீத்தி அஸ்ரானி ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். மேலும் ஏஞ்சல் மரியா, மோனிஷா மோகன், கருணாகரன், ஜென்சன் திவாகர், நிகிலா சங்கர், சேத்தன், தேவதர்ஷினி, அனுபமா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.சென்னை, வியட்நாம் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது.

Comments (0)
Add Comment