ஜான்வி வீடியோவை பரப்பியவர்களை சும்மா விடமாட்டேன்: ஜூனியர் என்டிஆர் எச்சரிக்கை
நடிகை ஜான்வி கபூரின் தோற்றத்தை தவறான முறையில் சித்தரித்து மார்பிங் செய்யப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான ‘தேவரா’ படத்தில் இடம்பெற்ற ‘சுட்டமல்லே’ பாடலில் காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த போலியான வீடியோ உருவாக்கப்பட்ட தாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் ஜான்வி கபூர் ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள து. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ஜூனியர் என்டிஆர், சோசியல் மீடியாவில் ஆவேசமான பதிவை வெளியிட்டுள்ளார். அதில், பெண்களை தாயாகவும் தெய்வமா கவும் போற்றுவது நமது கலாச்சாரத்தின் முக்கியமான ஒரு பகுதியாக இருக்கும் நிலையில், ஒரு பெண்ணை இழிவுபடுத்தும் வகையில் ஏஐ மூலம் சிலர் கீழ்த்தரமாகச் சென்று இருப்பது வேதனை அளிக்கிறது. இந்த மார்பிங் வீடியோவை உருவாக்கியவ ர்கள் மற்றும் அதனை வலைதளங்களில் பரப்புபவர்கள் மீது அனைத்து சட்ட நடவடிக் கைகளையும் எடுக்கப்போவதாகவும், இதன் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை விட்டுவைக்கப் போவதில்லை என்று கூறியுள்ளார்.