ஜேசனுக்கு சூர்யா, ஜோதிகா வாழ்த்து

ஜேசனுக்கு சூர்யா, ஜோதிகா வாழ்த்து
முதல்வர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் முதல் முறையாக இயக்கியுள்ள படம் சிக்மா. இந்த படம் நேற்று ரிலீசானது.இதையொட்டி அவருக்கு விஜயின் நண்பரும் முன்னணி நடிகருமான சூர்யா, ஜோதிகா ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சூர்யா வெளியிட்டுள்ள பதிவில், உங்கள் வரவு நல்வரவாகட்டும் சஞ்சய். குட்டி சஞ்சய் இப்போது ஒரு இயக்குனர் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. இன்று மிகப்பெரிய நாள், வாழ்த்துக்கள். படக்குழு வினருக்கும் வாழ்த்துக்கள் என கூறியுள்ளார். ஜோதிகா வெளியிட்டுள்ள பதிவில், ஜேசன் சஞ்சய் மற்றும் சிக்மா படக் குழுவுக்கு எனது வாழ்த்துக்கள்.மிகவும் பக்குவமான, அமைதியான மற்றும் இயல்பான இளைஞராக நீங்கள் வளர்ந்திருப்பதை பார்க்கும்போது உங்களுக்கு கிடைக்கும் வெற்றிக்கு நிச்சயம் நீங்கள் முழு தகுதியானவர் என நம்புகிறேன். உங்கள் பெற்றோருக்கு சிறந்த மகனாக இருக்கும் உங்களையும், ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் என் வாழ்த்துக்கள் என்ன பதிவிட்டுள்ளார்.

Comments (0)
Add Comment