என் திருமணத்தில் மற்றவர்களுக்கு ஏன் இவ்வளவு அக்கறை: அஞ்சலி காட்டம்

என் திருமணத்தில் மற்றவர்களுக்கு ஏன் இவ்வளவு அக்கறை: அஞ்சலி காட்டம்

இயக்குனர் ராம் இயக்கத்தில் “ஏழு கடல் ஏழு மலை” படத்தில் நடிகை அஞ்சலி நடித்துள்ளார். இப்படம் நாளை 1ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில்,இப்படத்தின் புரமோஷனில் பங்கேற்று வரும் அஞ்சலி இடம் திருமணம் குறித்த கேள்வி கேட்டதற்கு, என்னை நேரில் சந்திக்கும் பலரும் முதலில் எப்போது கல்யாணம் என்று தான் கேட்கின்றனர். என் கல்யாணத்தை நான் எப்போது வேண்டுமானாலும் செய்து கொள்வேன். அதில் மற்றவர்களுக்கு ஏன் இவ்வளவு அக்கறை என்று புரியவில்லை. கல்யாணம் என்பது ஒரு நாள் கொண்டாட்டம் கிடையாது, கல்யாணத்திற்கு பின்னால் ஒரு பெண்ணுடைய வாழ்க்கையே மாறுகிறது. பல விஷயங்களை அவள் தியாகம் செய்ய வேண்டியிருக்கிறது. இப்படி பல சிரமங்களும் பொறுப்புகளும் இருக்கும் போது, எதற்காக திரும்பத் திரும்ப இந்த ஒரே கேள்வியை கேட்கிறீர்கள்? என காட்டமாக பதில் சொல்லியுள்ளார்.

Comments (0)
Add Comment