காவி உடை அணிந்ததில் என்ன தவறு? பிரியா வாரியார்
கண் சிமிட்டலால் பிரபலமானவர் பிரியா வாரியர். தமிழ், மலையாள திரை உலகில் பிரபல நடிகையாக இருந்து வரும் இவர், சோசியல் மீடியாவிலும் ஆக்டிவா இருந்து வருகிறார். சமீபத்தில் அவர் பவுடர் விளம்பர நிகழ்ச்சியில் காவி உடையில் பங்கேற்ற காட்சிகள் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து யூடியூபர் ஒருவர்,நீங்கள் காவி நிற ஆடையை பவுடர் நிறத்திற்காக அணிந்தீர்களா? என பிரியா வாரியாரிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அவர் இது என்ன மாதிரியான கேள்வி? எனக்கு பிடித்த உடை அணிவதில் என்ன தவறு. இது ஒரு முட்டாள்தனமான கேள்வி.
இதையும் ஒரு பிரச்சனை ஆக்காதீர்கள் எனக் கூறியுள்ளார்.