விஸ்மயா மோகன் லாலின் வெயிட் லாஸ் ரகசியம்!
நடிகர் மோகன் லாலின் மகளான விஸ்மயா மோகன் லால் சினிமாவில் அறிமுகமாகி படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தனது உடல் எடையை குறைத்த ரகசியம் பற்றி அவர் கூறியது, நான் சுமார் 100 ஒரு கிலோ வெயிட் இருந்த போது படிகளில் ஏற சிரமப்படுவேன் . அப்போது எனக்கு மூச்சு திணறி விடும். இதைத்தொடர்ந்து நான் தாய்லாந்து சென்று அங்கு ‘பிட்கோ’ என்ற இடத்தில் நான் “மு வே தாய்” என்ற பயிற்சி செய்யத் தொடங்கினேன்.மிகவும் கடினமான பயிற்சியாக இருந்தது. அந்த நேரத்தில் கொரானா வந்ததால் நான் வீட்டிற்கு திரும்பாமல் அங்கு தங்கி தீவிர பயிற்சி செய்தேன். அதன் விளைவாக எனது இடை பெருமளவு குறைந்து இன்று மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்றார்.