சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் விஷால்
மதகஜராஜா படத்தை தொடர்ந்து விஷால் நடிக்கும் 35 வது திரைப்படத்தை சூப்பர் குட் ஃபிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி தயாரிக்கிறார். இது அந்த நிறுவனத்தின் 99வது படமாக உருவாகிறது.
இந்தப் படத்தை இயக்குனர் ரவி அரசு இயக்குகிறார். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடிக்கிறார். இதன் பூஜையில் நடிகர் கார்த்தி கலந்து கொண்டு கிளாப் அடித்து ஷூட்டிங்கை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஜீவா, இயக்குனர் வெற்றிமாறன், மணிமாறன், சரவண சுப்பையா,சரவணன், மோகன், விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம், ஒளிப்பதிவாளர் ஆர்தர் ஏ.வில்சன், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர் .