டபுள் இயக்குனர்கள் படத்தில் விமல்

டபுள் இயக்குனர்கள் படத்தில் விமல்
அறிமுக இரட்டை இயக்குனர்களான எல்சன் எல்தோஸ்,மனிஷ் கே தோப்பில் ஆகியோர் இயக்கும் புதிய படத்தில் விமல் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார்.இதில் முல்லை அரசி ஹீரோயின் ஆக நடிக்கிறார். மேலும் சேத்தன்,சரவணன் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர். காமெடி கலந்து பொழுது போக்கு படமாக உருவாகும் இந்த படத்தை அஜித் விநாயகா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் பூஜையுடன் தொடங்கியது.

Comments (0)
Add Comment