விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி ’
நடிகர், இசையமைப்பாளர், எடிட்டர் மற்றும் தயாரிப்பாளர் என்ன பன்முகத் திறமை கொண்ட விஜய் ஆண்டனி, அடுத்ததாக நடித்துள்ள படம் அப்பா குட்டி. தந்தை – மகள் உறவை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த படத்தை மு. மாறன் இயக்கியுள்ளார்.படத்தில் ப்ரீத்தி அஸ்ரணி, லிதான்யா, பகவதி பெருமாள், ஹரிபிரியா, இசையருவி மதன், சித்ரா லக்ஷ்மணன், ஸ்ரீஜா ரவி, வேட்டை முத்துக்குமார், ஜென்சன் தீவாகர், முருகானந்தம், மூணார் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு ராஜீவ் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்ய, எடிட்டிங் மற்றும் இசை பணியை விஜய் ஆண்டனியே மேற்கொள்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தை வரும் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.