மெக்சிகோவில் வாரணாசி படம்
மகேஷ் பாபு நடிப்பில் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘வாரணாசி’. இந்த படம் 2027ம் ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில் உலக அளவிலான ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நேற்று மெக்சிகோவில் வாரணாசி படத்தின் சிசிஎஸ்பி திரையிடப் படுவதாக இப்படத்தின் தயாரிப்பாளரான எஸ்.எஸ்.கார்த்திகேயா அறிவித்திருக்கிறார். நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ளும் நிலையில், ராஜமவுலி காணொளி மூலம் பார்வையாளர்களிடம் உரையாற்றுகிறார். இதில் வாரணாசி படத்தின் ஆரம்பகட்ட காட்சிகள் மற்றும் படப்பிடிப்பின் பின்னணி காட்சிகள் என இதுவரை பார்த்திராத பிரத்யேக காட்சிகளை திரையிடுகிறார்கள்.