எழுத்தாளர்கள் சங்கத்தில் இணைந்த வைரமுத்து
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் சேரன், பொதுச்செயலாளர் பட்டுக்கோட்டை பிரபாகர், பொருளாளர் ஆர். சுந்தர்ராஜன், துணைத் தலைவர் சினேகன் மற்றும் செயற்குழு உறுப்பினர் இயக்குநர் நவீன் ஆகியோர் நேற்று கவிஞர் வைரமுத்து வை சந்தித்தனர். அப்போது எழுத்தாளர் சங்கத்தில் இணையுமாறு நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று, வைரமுத்து தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில், ரூபாய் ஒரு லட்சம் செலுத்தி ஆயுட்கால உறுப்பினராக இணைந்தார்.