கருப்பு விழாவில் திரிஷா ஆப்சென்ட்
ஆர். ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘கருப்பு’. இதில் ஹீரோயின்களாக திரிஷா,ஷிவதா, சுவாசிக்கா ஆகியோர் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசை அமைத்துள்ள இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் வரும் மே 14-ந் தேதி படம் திரைக்கு வர இருக்கிறது. இதையொட்டி படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பிரமாண்டமாக நடந்தது. விழாவில் சூர்யா, இயக்குனர் ஆர் ஜே பாலாஜி,நடிகைகள் ஷிவதா,சுவாசிக்கா ஆகியோர் கலந்து கொண்டனர்.ஆனால் ஹீரோயினான திரிஷா பங்கேற்கவில்லை. இது குறித்து கேட்டதற்கு தேர்தல் ரிசல்ட் வரும் வரை வெளியில் வர வேண்டாம் என முடிவு செய்துள்ளாராம்.