டாக்ஸிக் ஒரு சாதாரண படம் அல்ல: நயன்தாரா
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் நடித்துள்ள படம் டாக்ஸிக். இதில் நயன்தாரா,கியாரா அத்வானி,ஹீமாகுரேசி, தாராசுதாரியா உள்பட பலர் நடித்துள்ளனர். வரும் 26-ந் தேதி சர்வதேச அளவில் படம் ரிலீஸ் ஆகிறது. கே.வி.என். புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா பெங்களூரில் நடந்தது.இதில் நயன்தாரா பேசியது, நிறைய நடிகர், நடிகைகள் நடிக்கும் படங்களை நான் ஏற்றுக்கொள்வதில்லை. அது போன்ற படங்களில் நடிப்பதற்கு நான் சற்று தயங்குவேன். கீது மோகன்தாஸ் இந்த படத்தில் நடிப்பதற்கு என்னை அழைத்த போது நான் முதலில் மறுத்தேன். ஆனால் கீது என்னிடம் 10 மில்லியன் கேள்விகளை கேட்டார்.ஒரு வழியாக நான் அவரிடம் சரி வந்து கதை சொல் என்றேன். அவர் வந்து கதையை சொன்னதும் அதைக் கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். உடனடியாக அந்த படத்தில் நடிப்பதற்கு சம்மதித்தேன். இது ஒரு சாதாரண படம் அல்ல. பொதுவாக பட விழாக்களுக்கு செல்வதும், அங்கு பேசுவதும் எனக்கு கடினமாக இருப்பதால் நான் செல்வதில்லை ஆனால் யாஷிக்காக மட்டுமே
இங்கு வந்தேன் என்றார்.