முதல் படத்திலேயே 3 ஹீரோயின்களா!!

முதல் படத்திலேயே 3 ஹீரோயின்களா!!
விக்னேஷ் நடராஜன் இயக்கியுள்ள வெப் தொடர் வாரண்ட். சிவன் பிச்சர்ஸ் மற்றும் எஸ் ஸ்டுடியோஸ் சார்பில் பிரசாந்த் பாண்டிய ராஜ், விஷால் ஆதிஸ்வர் இணைந்து தயாரித்துள்ள இந்த தொடர் வரும் 22-ந் தேதி ஜீ 5 தளத்தில் ரிலீஸ் ஆகிறது. இதில் கோட்டை கருப்பசாமி என்ற கேரக்டரில் பிரசாந்த் பாண்டிராஜ் நடிக்கிறார்.அவருடன் நம்ரிதா அருள்ஜோதி, சாயாதேவி,மீனா ஆகிய 3 பேர் ஹீரோயின் களாக நடித்துள்ளனர்.மேலும் பாலாஜி சக்திவேல், காளி வெங்கட், அருள்தாஸ் , ஹலோ கந்தசாமி, கவுசல்யா, வையாபுரி உள்பட பலர் நடித்துள்ள னர்.சாம். சி.எஸ் இசையமைத்து ள்ளார்.இந்த தொடரின் டிரெய்லர் அறிமுக விழா நடந்தது. இதில் இயக்குனர்கள் சுசீந்திரன், பாண்டிராஜ், தமிழரசன் பச்சமுத்து, ராம்குமார் நடிகர்கள் போஸ் வெங்கட், வையாபுரி, அருள் தாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments (0)
Add Comment