பிரபாஸ் படத்தில் மூன்று ஹீரோயின்

பிரபாஸ் படத்தில் மூன்று ஹீரோயின்
இயக்குநர் மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள படம் ராஜா சாப். இந்தப் படத்தின் டீசர் நேற்று வெளியானது. இதில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரிதிகுமார் ஆகிய 3 ஹீரோயின்கள் இருப்பது டீசரை பார்த்த போது தெரிய வந்தது. ஃபேண்டசி கலந்த ஹாரர் கதையாக உருவாகி உள்ள இப்படத்தை ஃபீபுள் மீடியா பேக்டரி தயாரிக்கிறது. ஷூட்டிங் முடிந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வரும் இந்த படம் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment