ஜனநாயகன் படத்தின் ரன்னிங் டைம் இதுதான்!!
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ஜனநாயகன். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர். விஜய்யின் கடைசி படம் என்பதால் உலகம் முழுவதும் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வரும் 27ஆம் தேதி மலேசியாவில் இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இந்த நிலையில் ரிலீஸ் அன்று தமிழ்நாட்டில் அதிகாலை காட்சிக்கு அனுமதி இல்லை என்பதால் காலை 9 மணிக்கு தான் ஜனநாயகன் தொடங்கும். உலகம் முழுக்க இந்திய நேரப்படி காலை 8 மணிக்கு தான் எஃப் டி எஃப் எஸ் தொடங்கும் என்பதால் கிட்டத்தட்ட உலகம் முழுக்க ஒரே நேரத்தில் ரிலீஸாகிறது. தற்போதைய தகவலின்படி படத்தின் ரன் டைம் 3 மணி நேரம் 6 நிமிடங்கள் என கூறப்படுகிறது.