இந்தியாவில் எரிபொருள் பற்றாக்குறை இல்லை: தவறான தகவல்களை நம்ப வேண்டாம்- இந்திய அரசு
சமூக வலைதளங்களில் இந்தியாவில் எரிபொருள் இருப்பு 5 முதல் 10 நாட்கள் மட்டுமே உள்ளதாக பரவும் தகவல் தவறானது என அரசு தெரிவித்துள்ளது.
நாட்டில் எங்கும் பெட்ரோல், டீசல், எல்பிஜி பற்றாக்குறை இல்லை; விநியோகம் சீராக நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் மொத்தமாக சுமார் 74 நாட்களுக்கு தேவையான எரிபொருள் சேமிப்பு திறன் உள்ளது. தற்போது சுமார் 60 நாட்களுக்கு தேவையான இருப்பு உள்ளது.
மக்கள் அச்சப்படாமல் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.