சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் நீர் தேக்கம், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் மற்றும் கடலோர மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது