நயன்தாரா, திரிஷா இணைந்து வெளியிட்ட டபுள் ஆக்குபன்சி பட டிரெய்லர்
குஷ்பு சுந்தரின் அவ்னி மூவிஸ் மற்றும் ஏ.சி. அருண்குமாரின் பென்ஸ் மீடியா நிறுவன தயாரிப்பில், அறிமுக இயக்குனர் அஸ்வின் கந்தசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் டபுள் ஆக்குபன்சி. இதில் சந்தோஷ், சம்யுக்தா விஸ்வநாதன்,ரேஷ்மா வெங்கடேஷ், வினோத்கிஷன், வி.டி.வி. கணேஷ், பகவதி பெருமாள் உள்படபலர் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார். வரும் 12ஆம் தேதி படம் ரிலீஸ் ஆக உள்ளது . இதற்கு முன்பாக இப்படத்தின் டிரெய்லர் நேற்று மாலை 6 மணிக்கு வெளியானது. இந்த டிரெய்லரை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் சவுத் குயின் திரிஷா இருவரும் முதல் முறையாக இணைந்து வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.