கரகாட்டக்காரன் ஜோடியின் திடீர் சந்திப்பு

கரகாட்டக்காரன் ஜோடியின் திடீர் சந்திப்பு
கங்கை அமரன் இயக்கத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற கரகாட்டகாரன் படத்தில் ராமராஜனுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கனகா. அந்தப் படத்துக்கு பிறகு நடிகை கனகாவுக்கு வாய்ப்புகள் குவிந்தது. ரஜினி சத்யராஜ் பிரபு சரத்குமார் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையாக மாறி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். குறுகிய காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்தாலும் கரகாட்டகாரன் படம் தான் அவரது தனி அடையாள சின்னமாக இருந்து வருகிறது. இந்நிலையில் தாயார் தேவிகா திடீரென மரணமடைந்தார். இதனால் அடையாறில் உள்ள தனது வீட்டில் தனியாக இருந்து வரும் கனகாவை,நடிகர் ராமராஜன் நேரில் சந்தித்து பேசி ஆறுதல் கூறிஉள்ளார்.

Comments (0)
Add Comment