சின்மயி குரலில் ‘ஜெய் ஜெய் ராம்’ பாடல்
நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ராமாயணம்’. இதில், ஸ்ரீ ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, ராவணனாக யஷ், அனுமனாக சன்னி தியோல் மற்றும் லட்சுமணனாக ரவி துபே ஆகியோர் நடித்துள்ளனர். பிரைம் போகஸ் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்தை சோனி பிக்சர்ஸ் நிறுவனம் விநியோகம் செய்கிறது. தீபாவளியை முன்னிட்டு ‘ராமாயணம் பாகம் 1’ திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில் ‘ராமாயணம்’ படத்தில் இருந்து முதல் பாடலான ‘ஜெய் ஜெய் ராம்’ பாடல் வெளியாகியுள்ளது. ஸ்ரீ ராமரைப் போற்றும் இப்பாடலை ஏ ஆர் ரஹ்மான் இசையில் கார்த்திக் நேத்தா வரிகள் எழுத சின்மயி மற்றும் ஹரிச்சரன் இணைந்து பாடி உள்ளனர். மிகவும் தெய்வீக கலையுடன் இப்பாடல் கேட்பதற்கு இனிமையாக அமைந்துள்ளது.