‘ டயங்கரம்’ படத்தின் ஷூட்டிங் ஓவர்

‘ டயங்கரம்’ படத்தின் ஷூட்டிங் ஓவர்
‘டிராகன்’ படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான வி ஜே சித்து கதையின் நாயகனாக நடித்து இயக்குநராக அறிமுகமா கும் படம் ‘டயங்கரம்’. இப்படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கே. கணேஷ் தயாரித்துள்ளார். இதில் சித்து உடன் நட்டி நட்ராஜ், காளி வெங்கட், இளவரசு, நிதின் சத்யா, ஹர்ஷத்கான், ‘ஆதித்யா’ கதிர் உட்பட பலர் நடித்துள்ளனர். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, சித்து குமார் இசையமைத்துள்ளார்.சமகால இளைய தலைமுறையினரின் வாழ்வியலை மையப்படுத்திய காமெடி கலந்த பொழுது போக்கு படமான இதன் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் டீசர், இசை மற்றும் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.

Comments (0)
Add Comment