சிவாவால்‘பறந்து போ’ஷூட்டிங் கேன்சல் ஆனது: இயக்குனர் ராம்
ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்‘பறந்து போ’. இதில் சிவா, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுன், ரியான், அஞ்சலி, அஜு வர்க்கீஸ், விஜய் யேசுதாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். வரும் ஜூலை 4-ந் தேதி படம் வெளியாகிறது. இதை ஒட்டி நடந்த ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் இயக்குனர் ராம் பேசியது, நடிகர் சிவாவை எல்லோரும் அகில உலக சூப்பர் ஸ்டார் என்பார்கள். உண்மையாக அவர் அப்படிதான். படப்பிடிப்பை வடமாநிலத்தில் ஒரு இடத்தில் நடத்திக் கொண்டிருந்தோம். அவரை பார்க்க மக்கள் அதிக அளவில் கூடி விட்டார்கள். ஒரு நாள் இரவு படப்பிடிப்பே ரத்து செய்யப்பட்டது என்றார்.