சதத்தை நெருங்கும் தாய்க்கிழவி

சதத்தை நெருங்கும் தாய்க்கிழவி
அறிமுக இயக்குனர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் 27-ந் தேதி ரிலீஸ் ஆன படம் ‘தாய் கிழவி’. இந்தப் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடி வருகிறது. 25 நாட்களில் இப்படம் 75 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. தற்போது 75 நாட்களில் 90 கோடி வசூல் செய்துள்ளது. ஒரு சின்ன பட்ஜெட்டில் உருவான இப்படம் மிகப்பெரிய வசூலை ஈட்டி உள்ளது. விரைவில் 100 கோடி கிளப்பிலும் இணையும் என கூறுகின்றனர். இப்படத்தை எஸ் கே புரொடக்ஷன்ஸ் சார்பில் சிவகார்த்திகேயன் மற்றும் பேஷன் ஸ்டூடியோஸ் சார்பில் சுதன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

Comments (0)
Add Comment