ரீ ரிலீசில் 10 நாளில் 20கோடி வசூல் செய்த படையப்பா படம்

ரீ ரிலீசில் 10 நாளில் 20கோடி வசூல் செய்த படையப்பா படம்

ரஜினிகாந்த் நடிப்பில் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த1999-ம் ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி ரிலீஸாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘படையப்பா’. இப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் கழித்து கடந்த 12ம் தேதி ரஜனியின் 75 வது பிறந்தநாளை முன்னிட்டு ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. தமிழகத்தில் மட்டும் இந்த படம் 500க்கும் அதிகமான திரைகளில் வெளியாகி வசூலை குவித்தது. பத்து நாட்களில் படையப்பா படம் 20 கோடி அளவுக்கு வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது. இந்த வாரம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அவதார்-3 படத்தையும் தாண்டி படையப்பாவுக்கு ரசிகர்களிடம் ஆதரவு பெருகி வருவது குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment