ஹீரோவான லண்டன் தொழிலதிபர்
லண்டனைச் சேர்ந்த டன்ஸ்டன் இன்டர்நேஷனல் நிறுவனம் தமிழில் பிரம்மாண்டமான ஒரு திரைப்படத்தை அதிக பொருட்செலவில் தயாரிக்கிறது. இதில் ஹீரோவாக அந்த நிறுவனத்தின் நிறுவனர் துஷாந் நடிக்கிறார். ‘வட்டக்கானல்’ படத்தை இயக்கிய பித்தாக் புகழேந்தி இப்படத்தை இயக்குகிறார். இவரது வித்தியாசமான திரைக்கதையால் ஈர்க்கப்பட்ட தயாரிப்புக் குழு, இப்படத்திற்கான இயக்குநராக அவரைத் தேர்வு செய்துள்ளது. தற்போது படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள் மற்றும் திறமையான தொழில்நுட்பக் கலைஞர்களைத் தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் படப்பிடிப்பை வரும் டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் துவங்க திட்டமிட்டுள்ளனர்.கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஷூட்டிங் நடைபெற உள்ளது.