மீண்டும் தொடங்கிய அரசன் பட ஷூட்டிங்

மீண்டும் தொடங்கிய அரசன் பட ஷூட்டிங்
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு ‘அரசன்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் யோகி பாபு, பிரியங்கா அருள் மோகன்,ஆண்ட்ரியா, கிஷோர், சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்துள்ள னர். அனிருத் இசை அமைக்க, கலைப்புலி பானு படத்தை பிரமாண்டமாக தயாரிக்கிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு
கோவில்பட்டியில் நடந்து முடிந்தது.அதனை தொடர்ந்து சமீபத்தில் சென்னையில் சில காட்சிகள் படமாக்கப் பட்டன. தற்போது மீண்டும் இதன் ஷூட்டிங் துவங்கியுள்ளது. இதில் சிம்பு சம்பந்தப்பட்ட காட்சிகளை வெற்றிமாறன் படமாக்கி வருகிறார். படப்பிடிப்பு தளத்தில் அவர்கள் இருவரும் உள்ள காட்சி ஒன்று வெளியாகி ரசிகர்கள் மூலம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. வடசென்னையை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இந்த படத்தின் மூலம் வெற்றி மாறனும் சிம்புவும் முதல் முறையாக இணைந்துள்ளனர்.

Comments (0)
Add Comment