பேயாக மிரட்டும் பூஜா ஹெக்டே
நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் காஞ்சனா – 4 படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் பாலிவுட் நடிகைகள் பூஜா ஹெக்டே, நோரா ஃபதேஹி ஆகியோர் நடிக்கின்றனர். ஏற்கனவே இதன் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது இந்த படத்தை ஆகஸ்ட் மாத இறுதியில் வெளியிட ராகவா லாரன்ஸ் திட்டமிட்டுள்ளார்.
அதோடு இதில் பேயாக பூஜா ஹெக்டே நடிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தற்போது ராகவா லாரன்ஸ் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் கதையில், பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் ’பென்ஸ்’ படத்தில் நடித்து வருகிறார்.