நயன்தாரா தான் என் ரோல் மாடல்: ஸ்ரீலீலா
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகை யாக இருந்து வரும் ஸ்ரீலீலா, சென்னை அமிர்தா குரூப் பிராண்ட் அம்பாசிடராக இருந்து வருகிறார்.சென்னையில் அமிர்தா கல்லூரிக்கு விசிட் செய்த ஸ்ரீலீலா, அங்கு, மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது மாணவர்கள் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் வருமாறு,சென்னை ரொம்ப பிடிக்கும். இங்குள்ள பசங்க ரொம்ப ‘சுவீட்’. சென்னை தோசை எனக்கு பிடித்த உணவு. திருமணம் பற்றி இப்போது நான் யோசிக்கவில்லை. மாணவ, மாணவிகள் தோல்வியை கண்டு துவண்டு போக கூடாது. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இடத்தை நான் பிடிக்க விரும்பவில்லை.அவர் தான் எனக்கு ரோல் மாடல்.என்னையும் செல் போனையும் பிரிக்க முடியாது. எனக்கு எல்லாமே அம்மா தான். அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் என்றார்.