எஸ்கேவுக்கு ஜோடியான கயாடு லோகர்
சேயோன் படத்திற்கு பிறகு நடிகர்சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தை பார்க்கிங் பட இயக்குனரான ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார். இது அவரின் 27 வது படமாகும். இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு எஸ்கே.27 என பெயரிடப்பட்டுள்ளது.இதில் கதாநாயகியாக கயாடு லோகர் நடிக்கிறார். இருவரும் முதல்முறையாக இந்த படத்தின் மூலம் ஜோடி சேருகின்றனர். படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இந்த படத்தில் ஜார்ஜ் மரியான், விடிவி கணேஷ், பரிதாபங்கள் புகழ் சுதாகர் ஆகியோர் நடிக்கின்றனர். படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். யார் இசையமைப்பாளர் என்பது அடுத்த அறிவிப்பில் வெளியாக இருக்கிறது.