வில்லனாக கலக்கும் நடிகரின் தந்தை
சமீபத்தில் வெளியான படை தலைவன் மற்றும் பேரன்பும் பெருங்கோபமும் ஆகிய படங்களில் வில்லத்தனம் கலந்த நடிப்பில் மிரட்டி இருக்கும் நடிகர் லோகு, நடிகர் கதிரின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது. மாஸ்டர் படத்தில் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்து அவர், பின்னர் சுழல் வெப் தொடரில் ஒரு கேரக்டரில் நடித்திருந்தார். தற்போது ரிலீஸ் ஆகி உள்ள இந்த இரண்டு படங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறும்போது, சிறந்த குணாசித்திர பாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் விரும்பும் நடிகராக வரவேண்டும் என்பதே எனது ஆசை. தற்போது தீயவர் குலை நடுங்க மற்றும் ஆர்யன்
ஆகிய படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளேன் என்றார்.