மாளவிகாவை டென்ஷன் ஆக்கிய ரசிகர்
நடிகை மாளவிகா மோகனன் தற்போது தமிழில் கார்த்தியுடன் சர்தார் 2 , தெலுங்கில் பிரபாஸ் உடன் தி ராஜா சாப், மலையாளத்தில் மோகன்லாலுடன் ஹிருதயபூர்வம் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.
இதோடு சோசியல் மீடியாவில் அடிக்கடி ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வருவார். அந்த வகையில் அவருடைய கிளாமர் புகைப்படங்களை சுட்டிக்காட்டி, இதில் காட்டும் ஆர்வத்தை நடிப்பில் காட்டலாமே என ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டிருந்தார். அவருக்கு பதில் அளித்த மாளவிகா,‛‛நான் நடித்த தங்கலான் படத்தில் போட்ட உழைப்பை நீங்கள் பார்க்கவில்லையா? அந்த படத்தில் உடல் ரீதியாகவும் நான் கஷ்டப்பட்டு நடித்தேன் என டென்ஷன் ஆக பதிலடி கொடுத்துள்ளார்.