நாக பந்தம்’ படத்தின் கவுண்ட் டவுன் தொடங்கியது

நாக பந்தம்’ படத்தின் கவுண்ட் டவுன் தொடங்கியது
அபிஷேக் நாமா இயக்கத்தில் உருவாகி உள்ள புராண, சாகச படம் ‘நாக பந்தம்’. இதுவரை கண்டிராத ஒரு பிரம்மாண்டம், தெய்வீக சக்தி மற்றும் அதிரடி சண்டை காட்சிகளை கொண்ட ஒரு தனித்துவமான சினிமா அனுபவத்தை ரசிகர்களுக்கு இப்படம் வழங்க உள்ளது. நாக் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் நிஷிதா நாகிரெட்டி மற்றும் அபிஷேக் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் கிஷோர் அன்னபுரெட்டி ஆகியோர் இணைந்து படத்தை தயாரித்துள்ளனர். சக்தி வாய்ந்த முன்னணி கதாபாத்திரத்தில் நடிகர் விராட் கர்ணா நடிக்கிறார். அவருடன் நபா நடேஷ், ஐஸ்வர்யா மேனன், ஜெகபதி பாபு , மகேஷ் மஞ்சரேக்கர், ரிஷப் சாவ்னி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் ஜூலை 3ம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பால் கவுண்டவுன் துவங்கி உள்ளது.

Comments (0)
Add Comment