100 நாடுகளில் கூலி படம் ரிலீஸ்
ரஜினி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் கூலி அடுத்த மாதம் 14-ந் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படம் இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் வியாபாரம் உச்சம் தொட்டு உள்ளது. இதன் வெளிநாட்டு உரிமையை கைப்பற்றியுள்ள ஹம்சிலி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் கூலி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது. தமிழில் இதுவரை வேறு எந்த படமும் ரிலீஸ் ஆகாத அளவிற்கு 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாகி சாதனை படைக்க உள்ளது.