திரௌபதிக்கு 2- படத்துக்கு வழி விட்ட தெறி
விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படம் கடந்த 9ஆம் தேதி பொங்கலுக்கு வெளியாக இருந்தது. சென்சார் பிரச்சனை யால் அந்த படம் ரிலீஸ் ஆகவில்லை. அதேபோல் மோகன் .ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி நடித்துள்ள திரௌபதி 2 படமும் கடந்த15ம் தேதி பொங்கலுக்கு ரிலீசாக இருந்தது. தியேட்டர் கிடைக்காததால் படத்தின் வெளியீட்டை வரும் 23ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். இந்த நிலையில் கலைப்புலி தாணு தயாரிப்பில் அட்லி இயக்கியத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற தெறி படமும் 23ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து திரௌபதி 2 படத்தின் இயக்குனர் மோகன் ஜி, தயாரிப்பாளர் சோலா சக்கரவர்த்தி ஆகியோர் தயாரிப்பாளர் தாணுவை சந்தித்து தெறி படத்தை வேறு தேதிக்கு மாற்றி வைக்க கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து தெறி பட ரிலீஸை வேறு தேதிக்கு தயாரிப்பாளர் தாணு மாற்றி உள்ளார்.