பஞ்சாயத்தில் சிக்கிய கருப்பு: ரசிகர்கள் அப்செட்

பஞ்சாயத்தில் சிக்கிய கருப்பு: ரசிகர்கள் அப்செட்
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கருப்பு படம் நேற்று (14ம் தேதி) வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியாஸ் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. காலை 9 மணி சிறப்பு காட்சியை பார்க்க ரசிகர்கள் காத்திருந்த நிலையில் திடீரென சிறப்பு காட்சி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இது குறிப்பு பட தயாரிப்பு தரப்பில் விசாரித்த போது, பண பிரச்சினை காரணமாக படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறினர். நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகும் சிக்கல் தீராததால் காலை மற்றும் பகல் காட்சி ரத்தானது. தொடர்ந்து மேட்டனி ஷோரூம் ரத்து செய்யப்பட்டதால் படம் வெளியாகும் என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

Comments (0)
Add Comment