சூர்யா ரசிகர்களை கொண்டாட வைத்த கருப்பு டிரெய்லர்

சூர்யா ரசிகர்களை கொண்டாட வைத்த கருப்பு டிரெய்லர்
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘கருப்பு’. படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க, ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் வரும் 14-ந் தேதி ரிலீஸ் ஆகிறது. இதையொட்டி படத்தின் டிரெய்லர் நேற்று முன் தினம் மாலை வெளியானது. சூர்யா ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த இந்த படத்தின் டிரைலர் வெளியானவுடன் அவரது ரசிகர்கள் குஷியாகி உள்ளனர். அதற்கு ஏற்றார் போல் டிரெய்லரும் செம மாஸாக அமைந்துள்ளது. இந்த வார வெளியிடாக களமிறங்கும் கருப்பு, தியேட்டரில் ஆட்டம் போடுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Comments (0)
Add Comment