பகத் பாசில் பட விழாவில் பங்கேற்ற சூர்யா

பகத் பாசில் பட விழாவில் பங்கேற்ற சூர்யா
அர்கா மீடியா ஒர்க்ஸ் , ஷோயிங் பிசினஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் ஷோபு யெர்லகடா,எஸ். எஸ். கார்த்திகேயா ஆகியோரின் தயாரிப்பில் ஷாங்க் யெலெட்டி இயக்கத்தில் பகத் பாசில் நடிப்பில் இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி வழங்கும் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ படம் அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தை தமிழகம் முழுவதும் சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் சார்பில் விநியோகஸ்தர் சக்திவேலன் வெளியிடுகிறார். இப்படத்தை விளம்பரப்படுத்தும் வகையில் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் சென்னையில் நடந்தது. இதில் எஸ்.எஸ். ராஜமௌலி, எஸ்.எஸ்.கார்த்திகேயா,  பகத் பாசில், சாரா சச்தேவ், பிரவீண் ஆண்டனி, விநியோகஸ்தர் சக்திவேலன் ஆகிய படக்குழுவினருடன்  நடிகர் சூர்யா மற்றும் தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்க ளாகக் கலந்து கொண்டனர்.

Comments (0)
Add Comment