சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் பட டிரெய்லர் ரிலீஸ்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் பட டிரெய்லர் ரிலீஸ்
இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் விஸ்வநாத் & சன்ஸ். இப்படத்தில் மமீதா பைஜு, ரவீனா டாண்டன், ராதிகா சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். சூர்யதேவர நாக வம்ஷீ மற்றும் சாய் சௌஜன்யா  ஆகியோர் தயாரித்துள்ள இந்தப் படத்திற்க்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். வரும் 14ம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தின் இசை கோயம்புத்தூரில் நடைபெற்ற பிரம்மாண்டமான விழாவில் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படத்தின் டிரெய்லர் நேற்று முன்தினம் வெளியானது. நாற்பது வயதை கடந்தும் தனது கனவுகளை துரத்தும் சர்வதேச துப்பாக்கி சுடும் வீரரான சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தை இந்த ட்ரெய்லர் நமக்கு அறிமுகப்படுத்துகிறது.

Comments (0)
Add Comment