சூரியின் ‘மண்டாடி’ பட ஷூட்டிங் முடிந்தது
மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘மண்டாடி’. இந்த படத்தில் மகிமா நம்பியார், சுகாஷ், சத்யராஜ், ரவீந்தி ரா விஜய், மிதுன், பால சரவணன் உள்பட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் மீனவர் சமூகத்தினரின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகி வருகிறது.இந்த படத்தின் படப்பிடிப்பு ராமநாதபுரம் அருகில் நடைபெற்றது. பல மாதங்களாக நடந்து வந்த படபிடிப்பு தற்போது நிறைவு பெற்றுள்ளது. இதில் பயங்கர ரிஸ்க் எடுத்து சவாலான காட்சிகளில் சூரி நடித்துள்ளார். ஷூட்டிங் முடிந்ததையடுத்து எடிட்டிங், சவுண்ட் டிசைன், வி.எப்.எக்ஸ். மற்றும் இசை அமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.