தமிழில் ஹீரோவாக நடிக்கும் சுரேஷ் ரெய்னா

தமிழில் ஹீரோவாக நடிக்கும் சுரேஷ் ரெய்னா
முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தமிழ் படமொன்றில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.இந்த புதிய படத்தை
ட்ரீம் நைட் ஸ்டோரீஸ் என்ற புதிய பட தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் சரவணக்குமார்
தயாரிக்கிறார். அறிமுக இயக்குனர் லோகன் படத்தை இயக்குகிறார்.

சந்திப்.கே.விஜய்
ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். மேலும் படத்தில் நடிக்க உள்ள மற்ற நடிகர்,நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. இந்த படத்தின் தலைப்பு மற்றும் முதல் தோற்றம்
அறிமுக விழாவிற்கு முன்னாள் கேப்டன் டோனியை அழைப்பதற்கு படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். டோனி ஏற்கனவே
தமிழில் எல்.ஜி.எம். என்ற படத்தை தயாரித்து உள்ளார்.

Comments (0)
Add Comment